வவுனியாவில் அதிகாலையில் வாள்வெட்டு: நால்வர் படுகாயம்
வவுனியா - செட்டிகுளம், மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (16.08.2024) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல்
அதிகாலை குறித்த வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், வாள்வெட்டு தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது வீட்டில் இருந்த முதியவர்களான ஐயர் மற்றும் அவரது மனைவி அத்துடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மூவர் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் மேற்கொண்டவர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில் பறயநாலங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
