சைனோபார்ம் தடுப்பபூசிகள் திருட்டு - தீவிர விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்
ஹபராதுவ பிரதேசத்தில் 90000 ரூபாய் பெறுமதியான சைனோபார்ம் தடுப்பூசிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் நேற்று சுகாதார வைத்திய அதிகாரி ஹபராதுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பணியாற்றிய சாரதி மற்றும் ஊழியர் ஒருவர் இந்த சம்பவத்திற்கு பொறுப்பு கூற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை மேற்கொள்வதற்கு காலி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினால், காலி குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 19 மணி நேரம் முன்
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி : இந்த ராசியினர் வாழ்வில் தொட்டதெல்லாம் பொன்னாகும்! உங்க ராசியும் இருக்கா? Manithan