கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஒட்சிசன் சிலிண்டர்கள் திருட்டு
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து ஒட்சிசன் சிலிண்டர்களைத் திருடியதாக சுகாதார ஊழியர் ஒருவரை மருதானைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
43ஆம் வார்டில் பணியாற்றும் சுகாதார உதவியாளர் ஒருவர் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த இரு ஒட்சிசன் சிலிண்டர்கள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார்.
இரண்டு சிலிண்டர்களுடன் சந்தேக நபர் மருத்துவமனை வளாகத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதானவரிடம் மேற்கொண்ட விசாரணையிலிருந்து இத்திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்ட மற்றைய சுகாதார ஊழியரை கைது செய்ய விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.
வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் பணியாற்றும் தாதி ஒருவரே ஒட்சிசன் சிலிண்டர் திருடப்பட்டமை குறித்து முறைப்பாடு செய்திருந்தார் என பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.