நாடு திரும்பயிருந்த சீன பிரஜையின் உடமைகள் திருட்டு: பொலிஸ் விசாரணை தீவிரம்
நாளையதினம் சொந்த நாட்டிற்குச் செல்லவிருந்த சீனப் பிரஜை ஒருவரின் கடவுச்சீட்டு அடங்கிய சூட்கேஸ் தொடருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Fan Jie Ann என்ற சீன சுற்றுலாப் பயணி நேற்று(04.10.2023 பிற்பகல் தொடருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பாதிப்புக்கு உள்ளான சீன சுற்றுலாப் பயணி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
காலியிலிருந்து மருதானை நோக்கி சென்ற விரைவு தொடருந்தில் இன்றைய தினம் பிற்பகல் காலியிலிருந்து மருதானை நோக்கி சென்ற விரைவு தொடருந்தில் முறைப்பாட்டாளர் பயணித்த போது குறித்த பயணப்பொதிகள் யாரோ ஒருவரால் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதற்கமைய பாதிப்புக்கு உள்ளான சீன பிரஜை கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் அவர் தங்குவதற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சனல் 4வை பற்றி பேசாதீர்கள்: எனது முடிவு இது: ஜெர்மனியில் ஊடகவியலாளரை எச்சரித்த ரணில் (முழுமையான தமிழாக்க காணொளி)



