பெண் பொலிஸ் அதிகாரி விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது..!
இங்கினியாகல பொலிஸ் நிலையத்தில் பல்வேறு சேவைகளுக்காக வருமானமாக பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரியொருவர் பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன், தொடர்புடைய பெண் பொலிஸ் அதிகாரி சுமார் 290,000 ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் நடத்திய உள் தணிக்கையின் (Internal Audit) போதே இந்த நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளது.
2 இலட்சம் ரூபாய் கையாடல் செய்த அதிகாரி
வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒலிபெருக்கி அனுமதி பத்திரங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மூலம் பொலிஸ் நிலையத்திற்குக் கிடைக்கும் வருமானப் பணம், அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ கணக்கில் வைப்பிலிடப்பட வேண்டும்.

எனினும், குறித்த பொலிஸ் நிலையத்திற்கு வந்த பணத்தை சந்தேகநபரான பெண் பொலிஸ் அதிகாரி உத்தியோகபூர்வ கணக்கில் செலுத்தாமல் கையாடல் செய்துள்ளமை தணிக்கை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அம்பாறை பிரிவின் பிரதி பொலிஸ் அதிகாரியான உதவி பொலிஸ் அதிகாரி(1) சம்பத் விக்ரமரத்னவின் மேற்பார்வையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அம்பாறை பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட பெண் பொலிஸ் அதிகாரி அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri