ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை-தாய் மற்றும் மகன் கைது!
பாடசாலையொன்றின் பிரதி அதிபருக்கு வழங்கப்பட்ட விடுதியினை உடைத்து அவருடைய உடைமைகளை திருடிய ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறும் 15வயது மகனை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பொகவந்தலவை கெர்க்கஸ்வோல்ட் பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் பிரதி அதிபருக்கு வழங்கப்பட்ட விடுதியினை உடைத்து மடிகணினி மற்றும் தங்க ஆபரணங்கள், பாடசாலையில் பாவனைக்கு வைக்கப்படிருந்த எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றை திருடிய ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், 15 வயது மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருட்டு சம்பவம்
குறித்த சந்தேகநபர்கள் நேற்று (12) ஹட்டன் நீதவான் முன்னிலைபடுத்தப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பொகவந்தலாவை பாடசாலையொன்றின் பிரதி அதிபரின் விடுதியினை உடைத்து விடுதியில் இருந்த மடிகணினி மற்றும் தங்க ஆபரணங்கள் எரிவாயு நிரப்பும் சிலிண்டர் என்பன செவ்வாய்க்கிழமை (11) திருடப்பட்டப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொகவந்தலாவை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். விசாரணையில் பொகவந்தலாவை கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்டபகுதியில் உள்ள வீடு ஒன்றை பொகவந்தலாவை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு
சோதனையிட்ட போதே குறித்த வீட்டில் திருடப்பட்ட மடிகணினி, தங்க ஆபரணங்கள், எரிவாயு நிரப்பும் சிலிண்டர் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையிலேயே ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறும் 15வயது மகனை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 3 நாட்கள் முன்
![வாட்சப் ஸ்டேட்டஸ் சர்ச்சை பற்றி தாடி பாலாஜி விளக்கம்.. டாட்டூ போட்டுட்டா பதவி கிடைச்சிடுமா](https://cdn.ibcstack.com/article/93960555-fa65-450b-9368-da07aa559175/25-67ac7b018d3cf-sm.webp)
வாட்சப் ஸ்டேட்டஸ் சர்ச்சை பற்றி தாடி பாலாஜி விளக்கம்.. டாட்டூ போட்டுட்டா பதவி கிடைச்சிடுமா Cineulagam
![Viral Video: மின்னல் வேகத்தில் சென்ற இரண்டு பாம்புகள்... படம்பிடித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி](https://cdn.ibcstack.com/article/5d3f63f4-4425-4687-9657-0766415ab801/25-67ac3325b20aa-sm.webp)