மண்டூர் ஆலயத்தில் நடந்த திருட்டுச் சம்பவம் : பெண் ஒருவர் கைது
மட்டக்களப்பு மண்டூர் முருகன் ஆலயத்தில் பெண் ஒருவரின் 20 ஆயிரம் ரூபா பணத்துடன் இருந்த பணப்பையை திருடிய, பெரிய போரதீவு பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று(31) இரவு வெல்லாவெளி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்த
வரலாற்று பிரசித்தி பெற்ற மண்டூர் முருகன் ஆலைய வருடாந்த உற்சவம் இடம்பெற்று வருகின்ற நிலையில் அங்கு ஆலயத் தரிசனத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் ஒருவரின் 20 ஆயிரம் ரூபா பணத்துடன் கைப்பை திருட்டு போயுள்ளது.
இதனையடுத்து அங்கு கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸாருக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து, பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் த.றஜிக்காந்தன் தலைமையில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் மேற்கொண்ட விசாரணையில் பணப்பையை திருடிய பெண் ஒருவரை ஆலயப் பகுதியில் வைத்து மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.
இதன்போது திருட்டுப்போன கைப்பையும் அதில் இருந்து 20 ஆயிரம் ரூபா பணத்தை மீட்டதுடன் திருட்டில் ஈடுபட்ட பெண்ணிடம் இருந்து மேலதிகமாக 65 ஆயிரம் ரூபா பணத்தை மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் 39 வயதுடைய பெரிய போரதீவு பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 23 மணி நேரம் முன்

Ethirneechal: தடபுடலாக நடக்கும் தர்ஷன் கல்யாணம்.. பதற்றத்தில் அறிவுக்கரசி- பொண்ணு யார் தெரியுமா? Manithan
