யாழில் வர்த்தக நிலையமொன்றில் திருட்டு(Photos)
யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் நேற்று(20) திருட்டு இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை நகர் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் நேற்று முன்தினம்(19) திருட்டு இடம்பெற்றுள்ள நிலையில் நேற்றைய தினம் மந்திகையிலும் வர்த்தக நிலையம் ஒன்றில் திருட்டு இடம்பெற்றுள்ளது.
திருட்டு சம்பவம்
இந்த வர்த்தக நிலையத்தை நேற்று காலை வர்த்தக நடவடிக்கைகளுக்காக உரிமையாளரால் திறந்து பார்த்தபோது கூரை பிரிக்கப்பட்டு திருடப்பட்ட சம்பவத்தை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து வர்த்தக நிலைய உரிமையாளர் உடனடியாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
பெறுமதியான பொருட்கள் திருட்டு
குறித்த திருட்டு சம்பவத்தில் சுமார் 70 ஆயிரம் பெறுமதியான உணவு பொருட்கள், மற்றும் பணம் என்பன காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி, தலமை
பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையில் இடம்பெற்று வருகின்றன.





சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
