தீபச்செல்வனின் 'சயனைட்' நாவலின் முகப்பு அட்டையை வெளியிட்ட தமிழக ஆளுமைகள்
ஈழத்தின் முன்னணி எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய சயனைட் நாவலின் முகப்பினை தமிழ்நாட்டை சேர்ந்த பத்து ஆளுமைகள் சமநேரத்தில் இன்று வெளியிட்டுள்ளனர்.
2025ஆம் ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு வெளியாகும் இந்த நாவல் விடுதலைக்காய் களமாடிய ஒரு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தளபதி ஒருவரது வீரத்தையும் காதலையும் பேசுகின்றது.
நாவல் வெளியீட்டு விழா
மாவீரர் நினைவேந்தல் வாரத்தில் நாவலின் முகப்பு அட்டை வெளியிடப்பட்டுள்ள நிலையில் நாவல் வெளியீட்டு விழா சென்னையில் எதிர்வரும் ஜனவரி 3ஆம் நாள் இடம்பெறவுள்ளதாகவும் நாவலாசிரியர் தீபச்செல்வன் அறிவித்துள்ளார்.

இன்றைய நாளில் மாலை 4.30 மணிக்கு சம நேரத்தில் நாவலின் முகப்பு அட்டையை இயக்குனர் சீனு ராமசாமி, கவிஞர்களான குட்டிரேவதி, தமிழ்நதி, எழுத்தாளர் பவா செல்லத்துரை, ஓவியர் மருது, இயக்குனர் நடிகர் கவிதா பாரதி, இயக்குனர் ரஞ்சித் ஜோசப் உள்ளிட்ட பத்து ஆளுமைகள் வெளியிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


இந்தியாவுக்கு எதிராக புலம்பெயர் டாக்சி ஓட்டுநரின் மகன்: அவுஸ்திரேலிய அணியில் இந்திய வம்சாவளி பவுலர் News Lankasri