14 வயது சிறுமியை தனியே அழைத்துச் சென்ற இளைஞன் கைது!
யாழ்ப்பாணத்தில் 14 வயது சிறுமியைப் பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து தனியே அழைத்துச் சென்ற இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (18.03.2023) தெல்லிப்பளை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் - மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெல்லிப்பளை பொலிஸ்
அத்துடன், கைது செய்யப்பட்ட இளைஞன் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய நபர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
பாடசாலைக்குச் செல்ல முற்பட்டபோது குறித்த இளைஞன், சிறுமியை அழைத்துக் கொண்டு புதுக்குடியிருப்புக்குப் பகுதிக்குச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோர் தெல்லிப்பளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து, தெல்லிப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் உதயபாலா தலைமையில் புதுக்குடியிருப்பு பகுதிக்குச் சென்ற பொலிஸ் குழுவினர், சிறுமியை மீட்டுள்ளதுடன் இளைஞனைக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
இருவரையும் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தி மருத்துவ பரிசோதனைக்குப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam