திருகோணமலை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: சிறிய தந்தைக்கு விளக்கமறியல்
12 வயது சிறுமியைக் கர்ப்பிணியாக்கிய சிறிய தந்தையை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெப்பித்திக்கொள்ளாவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை -ஹொரவ்பொத்தான- ஒலுகஸ்கட பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஜயசூரிய ஆராய்ச்சிலாகே சமன் ஸ்ரீ என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதாக ஹொரவ்பொத்தான பொலிஸார் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை -மஹதிவுல்வெவ, திம்பிரிவெவ பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி, தனது தாயாருடன் சிறிய தந்தையின் வீட்டுக்குக் கடந்த 2022ஆம் ஆண்டு 9ஆம் மாதமளவில் சென்றுள்ளார்.

விசாரணை
இந்த நிலையில், சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் மஹதிவுல்வெவ பிரதேச மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு சிறுமியைப் பரிசோதனைக்குப்படுத்தியபோது, சிறுமி கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளதுடன், குறித்த சிறுமியைத் திருகோணமலை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையின்போது, சிறிய தந்தையினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்குப்படுத்தப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.

சிறுமி வழங்கிய வாக்குமூலத்தையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட ஹொரவ்பொத்தான சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினர், தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், குறித்த சந்தேக நபரான சிறிய தந்தை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது, அவரை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேநேரம், பாதிக்கப்பட்ட குறித்த சிறுமி திருகோணமலை பொது மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri