கொழும்பில் இடம்பெற்ற விருந்து வைபவத்தில் மோதல்: இளைஞன் உயிரிழப்பு!
கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் இடம்பெற்ற விருந்து வைபவம் ஒன்றின்போது ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்றைய தினம் (18.03.2023) இரவு இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படும் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞனின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விசாரணை
சம்பவ தினமான நேற்று, கொழும்பு போர்ட் சிட்டி வளாகத்தில் சிலர் விருந்து வைபவம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இதன்போது இடம்பெற்ற தாக்குதலில் குறித்த இளைஞன் படுகாயமடைந்துள்ளதாகத் பொலிஸ் விசாரணையில் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அங்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam