தனது பிள்ளைக்காக ஆசையாக சென்ற இளம் தந்தை பரிதாபமாக மரணம்
ஹொரனையில் இடம்பெற்ற கோர விபத்தில் இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கோனாபொல கும்புக பிரதேசத்தில் பாதுகாப்பற்ற வீதித் தடையில் கார் மோதி உயிரிழந்துள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தனது குழந்தையின் பால் தானத்துக்காக பூக்களுடன் சொகுசுக் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் கோனாபொல கும்புக கிழக்கில் வசிக்கும் 37 வயதுடைய நனோ தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் இன்று காலை தனது மூன்று மாத குழந்தைக்கான பால் தானத்திற்கான பூக்களை எடுத்து வருவதற்காக பிலியந்தலை பகுதிக்குச் சென்று விட்டு வீடு திரும்பும் போது வீதித் தடுப்பில் கார் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தின் பின்னர் காரின் இரண்டு காற்று பலூன்கள் இயக்கப்பட்டு சுமார் 100 மீற்றர் முன்னோக்கி இழுத்து நிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காரின் காற்று பலூன் இயக்கப்பட்டவுடன், அதிலிருந்து வீசப்பட்ட பிளாஸ்டிக் துண்டு அவரது கழுத்தை வெட்டியதில் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பான விசாரணைகளை மொரகஹேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri