வெள்ளவத்தையில் சிக்கிய வெளிநாட்டு பெண் - பணத்திற்காக கணவனின் மோசமான செயல்
உஸ்பெகிஸ்தான் பெண் ஒருவரை இலங்கைக்கு அழைத்து வந்து பாலியல் நடவடிக்கை ஈடுபடுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த 31 வயதுடைய நபர் குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு அளித்த முறைப்பாட்டிற்கமைய தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் தொழில் வழங்குவதாக கூறி, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு குறித்த பெண் அழைத்து வரப்பட்டுள்ளார். அதன் பின்னர் பாலியல் நடவடிக்கைக்காக அவர் விற்பனை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
உஸ்பெகிஸ்தான் பெண் 36 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சந்தேக நபரின் மனைவியான உஸ்பெகிஸ்தான் பெண் இவ்வாறான குற்ற செயல் தொடர்பில் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்ய தேவை இல்லை - டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த மோடி News Lankasri

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam
