கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவரின் மிக மோசமான செயல்!
கனடாவில் மூதாட்டி ஒருவரை துஸ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவத்தில் தமிழர் ஒருவரை ரொறண்டோ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்நாட்டு பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 29 வயதான இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
டிசம்பர் 26 ஆம் திகதி நள்ளிரவு 12:53 மணியளவில் ஸ்கார்பரோவின் கோல்ஃப்டேல் கார்டன் பகுதியில் உள்ள கிரீன்ஹோல்ம் சேர்க்யூட் மற்றும் லோரன்ஸ் அவென்யூ ஈஸ்ட் பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
பொலிஸார் வெளியிட்ட அறிக்கையின்படி, 84 வயதான பெண் ஒருவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ஒருவர் அவரது கதவைத் தட்டினார். அந்த நபர் பெண்ணுடன் நட்பாக பழகி, வீட்டிற்குள் நுழைந்து துஸ்பிரயோகம் செய்த பின்னர் வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக ரொறண்டோவைச் சேர்ந்த 29 வயதான பிரவீன் ‘பாபி’ போல் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபருக்கு எதிராக சட்டவிரோதமாக ஒரு குடியிருப்பில் தங்கியிருந்தது, தாக்குதல், வலுக்கட்டாயமாக அடைத்து வைத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், சந்தேகநபரின் புகைப்படத்தையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர். மேலும் குறித்த நபர் தொடர்பில் மேலதிக தகவல் தெரிந்தவர்கள், தம்மை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 17 மணி நேரம் முன்
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri