இலங்கையில் உலகின் விலைமதிப்பற்ற இரத்தின கற்கள்
தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையிடம் இருந்த உலகின் மிக மதிப்புமிக்க மற்றும் விலைமதிப்பற்ற மூன்று இரத்தின கற்கள் இன்று இலங்கை வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இலங்கை வங்கியின் தலைமையகத்தின் பாதுகாப்பு பெட்டகத்தில் இந்த இரத்தின கற்கள் வைக்கப்பட்டுள்ளன.
கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் அனைத்து நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுவத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபை அமைந்துள்ள கட்டடம் தாழிறங்கும் ஆபத்தில் உள்ளமையினால் அதன் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
நாரஹென்பிட்டியிலுள்ள உள்ள இடத்தில் தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையை நடத்தி செல்ல தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த இடத்தை உரிய முறையில் ஏற்பாடு செய்யும் வரையில் அதிகார சபையின் பொறுப்பில் இருந்த உலகின் மிக மதிப்பு மிக்க மற்றும் விலைமதிப்பற்ற மூன்று இரத்தின கற்கள் இலங்கை வங்கிக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேயின் உத்தரவுக்கு அமைய விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பிற்கு மத்தியில் இலங்கை வங்கியின் பிரதான கட்டடத்திற்கு இந்த இரத்தின கற்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.




சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
Super Singer 11: இலங்கை குயிலுக்கு சரண் ராஜா கொடுத்த பரிசு... எமோஷ்னலில் ஒட்டுமொத்த அரங்கம் Manithan