ஆஸ்திரேலியா கடற்கரையில் உலகின் மிகப்பெரிய கடல் புல் கண்டுபிடிப்பு
ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் மன்ஹாட்டனை விட மூன்று மடங்கு பெரிய கடல் புல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பூமியில் அறியப்பட்ட மிகப்பெரிய தாவரமாக இது அமைவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத் தாவரத்தை ஆராய்ச்சிக்கு உட்படுத்திய விஞ்ஞானிகள் நீருக்கடியில் உள்ள இப் புல்வெளியானது ஒரு தாவரமாக இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
4,500 ஆண்டுகள் வளரும் தாவரம்

இது ஒரு விதையிலிருந்து இத் தாவரம் வளர்ந்து உள்ளதாகவும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
கடல் புல் சுமார் 200 சதுர கிமீ (77 சதுர மைல்) பரப்பளவில் உள்ளது என்று மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாவர இனம் பொதுவாக ஒரு வருடத்திற்கு 35cm வரை ஒரு புல்வெளி போல் வளரும்.
அதன் தற்போதைய அளவுக்கு விரிவடைய 4,500 ஆண்டுகள் ஆகும் என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
ராயல் சொசைட்டி பி என்ற இதழில் இந்த ஆராய்ச்சி வெளியிடப்பட்டுள்ளது.

ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri