மட்டக்களப்பில் நடந்த விபத்தில் சிறுமி ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாவிக்கரை பூங்கா வீதி சந்தையில் ஏற்பட்ட விபத்தில் முன்பள்ளி பாடசாலை சிறுமி ஒருவர் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம், இன்று நேற்று (02.06.2026) இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பில் இருந்து சென்ற காருடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சாரதியின் அசமந்தபோக்கு
கார் சாரதியின் அசமந்த போக்கினால் விபத்து இடம்பெற்றதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தனது தாயுடன் முன்பள்ளிக்கு சென்ற சிறுமி ஒருவரே இவ்விபத்து சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.
பலத்த காயங்களுக்கு உள்ளான தாயும் மகளும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளளனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற மட்டக்களப்பு போக்குவரத்து பொலிசார் விபத்துக்கான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam