ராஜபக்சக்களின் காலத்தில் தடைகளின்றி முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தற்போதைய அரசாங்கத்தினால் எந்தவிதமான தடைகள் இன்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தற்போதைய அரசாங்கம் டயஸ்போராக்களினுடைய தேவைக்காக தான் இதெல்லாம் செய்கின்றார்கள் என ராஜபக்ச தரப்புக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.அத்தோடு முள்ளிவாய்க்காலில் தீவிரவாதிகளைத் தான் நினைவுபடுத்துகின்றனர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்தநிலையிலே,ராஜபக்சக்களின் ஆட்சிக் காலத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எந்தவிதமான தடையும் விதிக்கப்படவில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் கருப்பையா ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, யுத்தத்தால் இறந்தவர்களை நினைவு கூறுவது எந்தவிதத்திலும் தப்பில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,