தமிழர் பகுதியில் அலங்கோலப்படுத்தப்பட்ட வெசாக் கூடுகள் - அநுரவின் முடிவு விரைவில் வரவேண்டும்!
யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடு சேதமாக்கப்பட்ட சம்பவம் அரசியல் பரப்பில் பெரும் சலனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் சமூக வலைதளங்களிலும் கடுமையான விமர்சனங்களும் சில இனவாதத்தை தூண்டும் வகையிலான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு சிங்கள மாணவர்களினால் யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் வெசாக் கூடுகள் அமைக்கப்பட்டு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
இவ்வாறு அலங்கரிக்கப்பட்டிருந்த வெசாக் கூடுகள் அடையாளம் தெரியாதோாரால் சேதமாக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களினால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறிருக்கையில், இவ்விடயத்தை பயன்படுத்தி சில விசமிகள் இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இது உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வை... ஆடி மாதத்தில் எதிர்பாராத நிதி ஆதாயத்தினை பெறும் 5 ராசிகள் Manithan
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri