கொழும்பில் உச்சம்தொட்ட வீடுகளின் விலைகள்! நெருக்கடியில் மக்கள்
உலகிலேயே வீடுகள் அதிக விலைகளை கொண்ட நகரங்களில் ஒன்றாக கொழும்பு மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது நாட்டில் கட்டுமான பொருட்களின் விலைகள் அதிகமாக இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வீடுகளின் விலை
அதன்படி, இலங்கையில் சிமெந்தின் விலை ஏனைய நாடுகளை விட 45 சதவீதம் அதிகம் என்றும், பல நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் இரும்பின் விலையும் 75 சதவீதம் அதிகமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முக்கிய காரணம் நாட்டில் தற்போதுள்ள வரி முறைமை தான். அதன்படி, அரசாங்கம் தற்போதுள்ள வரி முறைமையில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக உலகிலேயே வீடுகள் அதிக விலைகளை கொண்ட நகரங்களில் ஒன்றாக கொழும்பு மாறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே, கட்டுமானத் துறைக்கு நிவாரணம் வழங்குவதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்க முடியும் என்றும் மேலும் கூறியுள்ளார்.