உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்டுப்பாடுகள் இலங்கையில் அமுல்! நிபுண ரணவக்க
தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கக் கட்டுப்பாடுகள் உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு முறை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிபுண ரணவக்க தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தனித்துவமான முடக்க கட்டுப்பாடுகளுடன் நாடு மூடப்பட்டாலும் பொருளாதார ரீதியாக முக்கியமான பல துறைகள் தொடர்ந்து செயற்பட முடிந்துள்ளது.
இதேவேளை அவுஸ்ரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் முடக்கத்தை அமுல்படுத்தினாலும், அவர்களால் கோவிட் தொற்று பரவுவதைத் தடுக்க முடியவில்லை.
பொருளாதாரம் சரிவடையாமல், நாடு முன்னேற வேண்டும், கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது என குறிப்பிட்டு்ள்ளார்.