கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி! - யாழில் சம்பவம்
கட்டட வேலையில் ஈடுபட்ட போது, மேல் தளத்திலிருந்து தவறி வீழ்ந்த தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டைச் சேர்ந்த நவரத்தினம் அன்ரன் ஜெயராஜா (வயது-36 ) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார். நீர்வேலியில் பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
"கட்டடத்தின் மேல் தளத்தில் சன்செட்டுக்கு தூண் போடும் பொழுது தவறி கீழே வீழ்ந்த அவர் மயங்கியுள்ளார். பின்னர் அவர் உடனடியாக கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற சமயம் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மரண விசாரணையை இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri