பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட பெண்களால் பரபரப்பு
அனுராதபுரத்தில் பொலிஸாரின் கடமைக்கு எதிராக செயற்பட்ட பெண் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கஹட்டகஸ்திகிலிய, துருக்குராகம பிரதேசத்தில் ஹேரோயினுடன் இருந்த இளைஞனை கைது செய்ய சென்ற சந்தர்ப்பத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
ஹெரோயினுடன் இருந்த சந்தேக நபரை கைது செய்வதற்கு சென்ற போது பொலிஸாருக்கு தடை ஏற்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய அனுராதபுரம் பிரிவின் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சுற்றிவளைப்பு மேற்கொண்டனர்.
இதன் போது 27 கிராம் ஹெரோயினுடன் 18 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கைது செய்வதற்கு எதிர்ப்பு வெளியிட்டு, சந்தேக நபரை விடுவிப்பதற்கு சிலர் முயற்சித்துள்ளனர்.
அங்கு சுற்றிவளைப்பிற்கு சென்ற அதிகாரிகளின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் போது 3 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 16 - 68 வயதிற்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்குள்ளான பொலிஸார் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.