பொலிஸாருக்கு பொய்யான தகவலை வழங்கிய பெண் விளக்கமறியலில்
119 பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்தை தொடர்புகொண்டு பொய்யான தகவல்களை வழங்கிய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தங்கொட்டுவை பொலிஸ் நிலையத்தில் இனந்தெரியாத சிலர் வாகனத்தில் வெடிப்பொருட்களை ஏற்றி வந்து அனர்த்தம் ஒன்றை ஏற்படுத்த தயாராகி வருவதாக இந்த பெண்கள் நேற்று முன்தினம் பிற்பகல் 2.45 மணிக்கு தொலைபேசியில் கூறியுள்ளனர்.
இதனடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், தங்கொட்டுவை பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான பெண்ணே தொலைபேசி அழைப்பை எடுத்துள்ளதாக கண்டறிந்துள்ளனர்.
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பெண்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளதுடன் அவர்கள் மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர்.
தொலைபேசி அழைப்பை எடுத்த எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மற்றைய பெண் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அரசியல்வாதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மறைத்துவைத்துள்ள கோடிக்கணக்கான பணம் - எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை - வீழ்த்தப்பட்ட 8 அமெரிக்க தளங்கள்
ஹரக் கட்டா பணம் வழங்கிய பட்டியலில் பெரும் புள்ளிகளின் பெயர்கள்! இலங்கை வரலாற்றில் பதிவாகவுள்ள பெரும் சம்பவம்
பஹ்ரைன் நாட்டின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரிக்கும் பதற்றம் News Lankasri