சுவிற்சர்லாந்தில் பலரின் கவனத்தையும் ஈர்த்த தமிழ்ப் பெண் வரைந்த ஓவியம்
ஈழத்தில் 2009ல் நடைபெற்ற இன அழிப்பு, போர்க்குற்றம் அதனைத் தொடர்ந்து இன்று வரை தொடரும் சிங்கள பௌத்த அடக்குமுறை போன்றவற்றை கருத்தோவியமாக வரைந்துள்ளார் ஒரு தமிழ் இளம் பெண்.
கடந்த 01.03.2021 அன்று தமிழ் இன அழிப்பிற்கு பன்னாட்டு சமூகத்திடம் நீதி கேட்டு ஜெனிவாவில் தமிழ் மக்களால் நடத்தப்பட்ட கவன ஈர்ப்பு போராட்டத்துக்காக செல்வி அபிர்சனாவினால் வரையப்பட்டது.
இவ்வோவியம் வெளிநாட்டவர்களை மட்டுமன்றி எம்மவர்களையும் சிந்திக்கத் தூண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யார் இந்த அபிர்சனா.
ஈழத்தில் யாழ். இணுவிலை தாயகமாக கொண்ட பெற்றோருக்கு சுவிற்சர்லாந்தில் அறோமா நிலத்தில் புறுக்நகரில் பிறந்தவர் தயாளகுரு அபிர்சனா ஆவார்.
சுவிற்சர்லாந்தில் அமைந்திருக்கும் Raiffeisen எனும் வங்கி நடாத்திய 49வது இளையோர்களுக்கான ஆக்கத்திறன் போட்டியில் ஓவியப் பிரிவில் இசையின் உலகம் எனும் தலைப்பில் வரையப்பட்ட படத்திற்கு ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ச் சிறுமியொருவர் 1வது பரிசினைப் பெற்று பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதோடு, அனைவரினதும் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.
இவ் வெற்றிக்காக அபிர்சனா தயாளகுருவுக்கு, பொற்கிழியாக ஆயிரம் சுவிஸ் பிராங்குகளை வங்கி வழங்கி மதிப்பளித்துள்ளது. மதிப்பளிப்பு நிகழ்வு 19. 06. 2019 அன்று ஒஸ்ரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் நடைபெற்றிருந்தது.
"இசை என்னை அசைக்கிறது" எனும் தலைப்பில் இவர் வரைந்த ஓவியம் பல ஆயிரம் போட்டியாளர்களுடன் போட்டியிட்டு வென்றது. இசையுடன் தொடர்புபடுத்தி, உங்கள் சொந்த அனுபவத்தினை கலையாகப் படையுங்கள் என வங்கி கேட்டிருந்தது.
இசை எப்படி உங்களை ஆட்படுத்துகிறது, இசை ஆக்கத்திறனை எப்படி வளர்க்கிறது, அதனை நீங்கள் உங்கள் கலையால் எப்படி வெளிப்படுத்துவீர்கள் என்பன போட்டியில் கேட்டிருந்த விடயமாகும்.
இசை - கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறது, செய்திகளை கடத்துகிறது, தூது செல்கிறது, பார்வை மாற்றத்தை அளிக்கிறது, சிந்திக்க வைக்கிறது எனும் பொருளில் பிறர் உதவி இல்லாமல் இவ் ஓவியம் தன்னால் நிறந்தீட்டி படைக்கப்பட்டதாக அபிர்சனா தெரிவித்தார்.
சுவிற்சர்லாந்து நுண்கலைக் கல்லூரியில் ஓவியத்துறையில் பட்டயக்கல்வியை மேற்கொள்ளும் இவர் உயர்கட்டிடக் கட்டுமான வரைவாளராகவும் மேற்படிப்பினை மேற்கொண்டு வருகின்றார்.









ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
