நடந்தது யுத்தம்!! அதை புலிகளே நடத்தினர் : சீனாவுக்கான இலங்கை தூதுவர்

Srilanka War UnitedNations PalithaKohana
By Benat Feb 21, 2022 11:39 AM GMT
Report

இலங்கையில் நடந்தது யுத்தம் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். யுத்தம் இனிமையானதல்ல. அரசாங்கம் முதலில் யுத்தத்தை நடத்தவில்லை. புலிகளே யுத்தத்தை நடத்தினர். எனவே இவை தொடர்பாக சரியான முறையில் ஆராய வேண்டும் என சீனாவுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கோஹன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிடுவார்.

ஆனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை தொடர்பாக எந்த ஒரு அழுத்தத்தையும் பிரயோகிக்க முடியாது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் ஆகியோருக்கு இலங்கை மீது அவ்வாறு அழுத்தங்களை பிரயோகிக்க அல்லது விடயங்களைத் திணிக்க எவ்விதமான அதிகாரமுமில்லை. இதனை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

அதேநேரம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இம்முறையும் சீனா இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்கும். சீனா எப்போதுமே முழுமையான ஆதரவை இலங்கைக்கு சர்வதேச மேடைகளில் வழங்கும். அந்தவகையில் இம்முறை ஐநா மனித உரிமைகள் பேரவையில் சீனா எமக்கு ஆதரவு வழங்கும். அதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கின்றுாம்.

இதேவேளை, இலங்கையில் காணாமல் போனோர் விவகாரம் உள்ளிட்ட விடயங்களை சர்வதேம் ஏன் பிடித்துக் கொண்டு இவ்வாறு இழுத்துக் கொண்டிருக்கின்றது என்று தெரியவில்லை.

ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் பச்லெட் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சிலி நாட்டில் எத்தனை ஆயிரம் பேர் காணாமல் போனார்கள். அவர்கள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டார்களா? அவர்களுக்கு என்ன நடந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டதா? அதேபோன்று ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா, ஏமுன் போன்னற நாடுகளில் எத்தனை பேர் காணாமல் போயுள்ளனர்?அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை சர்வதேச சமூகம் கண்டுபிடித்ததா? ஏன் இலங்கை விடயத்தில் இவ்வாறு விரட்டிக் கொண்டிருக்கின்னறனர் என்பது புரியவில்லை.

உலகில் எந்தவொரு நாடுமே பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு காணாமல் போனவர்களுக்கு நட்ட ஈடு வழங்கியதில்லை. ஆனால் இலங்கை இந்த தரப்பினருக்கு இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றது. இலங்கையில் காணாமல் போனோர் விவகாரம் ஒரு அரசியல் கருவியாக பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றது.

அரசாங்கத்துக்கு சர்வதேச மட்டத்தில் சிரமத்தை ஏற்படுத்துவதற்காக காணாமல் போனோர் விவகாரம் பயன்படுத்தப்பட்டு கொண்டிருப்பதை காண முடிகின்றது. காணாமல் போனோர் விவகாரம் தொடர்பில் யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

யுத்தம் முடிவடைந்து 13 வருடங்கள் கடந்து விட்டன. இந்த நிலைலில் அந்த காலப்பகுதியில் காணாமல் போனோருக்கான நடந்தது என்பதை கண்டுபிடிக்க முடியாது.

அவ்வாறு கண்டுபிடிப்பதற்கு உலகிலேயே ஒரு பொறிமுறை இல்லை. அதற்கான ஒரு மாதிரி இல்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். 20 ஆயிரம்? 19 ஆயிரம் பேர் காணாமல் போனதற்கான எழுத்துமூல விடயங்கள் இருப்பதாக கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்த விடயத்தில் யுத்தத்தின் போது பலர் தாக்குதலுக்கு உட்பட்டு இறந்து போயிருக்கலாம். அதேபோல் ஒரு சிலர் காடுகளில் தாக்குதலுக்கு உட்பட்டு இறந்து போயிருக்கலாம். அவர்களை கண்டுபிடிக்கவே முடியாது.

அதேபோன்று ஒரு சிலர் இந்தியா ஊடாக மேலைத்தேய நாடுகளுககுச் சென்று வேறு பெயர்களைக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கலாம்.

அவர்களின் பெயர்களும் இந்த காணாமல் போனோர் பட்டியலில் இருக்கலாம். நடந்தது யுத்தம் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். யுத்தம் இனிமையானதல்ல. அரசாங்கம் முதலில் யுத்தத்தை நடத்தவில்லை. புலிகளே யுத்தத்தை நடத்தினர். எனவே இவை தொடர்பாக சரியான முறையில் ஆராய வேண்டும். வெறுமனே காணாமல் போனோர் என்று போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US