வைத்தியசாலையின் கவனயீனத்தால் பரபரப்பான கிராமம்
காலி, பயாகல பிரதேசத்தில் கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளான சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமையால் மஹகம்மெத்த கிராம மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளார்கள் என தெரியவந்துள்ளது.
மூச்சு திணறல் காரணமாக பெண் ஒருவர் களுத்துறை நாகொட பொது வைத்தியசாலையில் கடந்த 18ஆம் திகதி காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில், நோயாளி அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார், அதன் முடிவுகளில் அவருக்கு கோவிட் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
அதற்கமைய அந்த பெண் நாகொட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில மணித்தியால சிகிச்சைகளின் பின்னர் நேற்று காலை அவர் உயிரிழந்துள்ளார்.
அதற்கமைய உயிரிழந்த பெண்ணுக்கு PCR பரிசோதனை மேற்கொண்டு அதன் முடிவு கிடைப்பதற்கு முன்னர் அதிகாரிகள் சடலத்தை ஒப்படைத்துள்ளனர்.
மலர் சாலைக்கு அனுப்பப்பட்ட இறுதி நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு சடலம் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டதுடன் கிராமத்தை சேர்ந்த பலர் அங்கு வருகைதந்துள்ளனர்.
நேற்று காலை வந்த PCR முடிவுகளில் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்னர் மீண்டும் அந்த சடலத்தை எடுக்க சென்றமையினால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர். இதனால் குடும்பத்தினர் மற்றும் அங்கு வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் அனைவரும் அச்சத்தில் இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
புலம்பெயர் தமிழர்களுடன் பேச விருப்பம்! - பிரித்தானியாவிடம் ஜனாதிபதி கோரிக்கை (பத்திரிக்கை கண்ணோட்டம்) |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam
