300 ரூபாவை தாண்டும் அமெரிக்க டொலரின் பெறுமதி! வெளியான தகவல்
இந்த வருட இறுதிக்குள் அமெரிக்க டொலரின் பெறுமதி 300 ரூபாவை தாண்டும் என முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் மற்றும் தற்போதைய பிரச்சினைகள் தொடர்பில் விசேட உரையாற்றிய போதே முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
ரூபாயின் பெறுமதி எவ்வாறு வீழ்ச்சியடையும் மற்றும் எதிர்காலத்தில் நாடு எதிர்கொள்ளும் பேரழிவு நிலை குறித்து அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், நாட்டின் இளைஞர்கள் அரசாங்கத்தின் மீதும், நாடாளுமன்றத்தின் மீதும் நம்பிக்கை இழந்துள்ள நிலையில் இந்த நிலையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
விரைவான திட்டத்தை வகுக்க வேண்டியது அனைவரின் பொறுப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 5 மணி நேரம் முன்
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri