25 வருடங்களில் இலங்கை ரூபாவின் பெறுமதியில் மிகப்பெரும் வீழ்ச்சி! இன்று பதிவானது
பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) இன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலரொன்றுக்கு எதிரான ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துவரும் நிலையில், அதன் வெகுவான வீழ்ச்சி இன்று பதிவானது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் நாளாந்த வெளிநாட்டு நாணயமாற்று வீதத்தின் அடிப்படையில், இன்று புதன்கிழமை அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 264.66 ரூபாவாகவும் விற்பனை விலை 274.99 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அமெரிக்க டொலரொன்றுக்கு எதிரான ரூபாவின் பெறுமதி நேற்று 269.99 ரூபாவாகக் காணப்பட்ட நிலையில், இன்றைய தினம் ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இது 25 வருடங்களில், இலங்கை ரூபா கண்டுள்ள பெருவீழ்ச்சி ஆகும்.