டொலரின் பெறுமதியில் மீண்டும் வீழ்ச்சி
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரொன்றின் பெறுமதியில் இன்றைய தினம் சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதன்படி, இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதி 367 ரூபா 22 சதமாக பதிவாகியுள்ளது.
அதேசமயம், டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 356 ரூபா 06 சதமாக பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கியின் தகவலின் படி இன்றைய தினம் யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 389 ரூபா 87 சதமாக பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 374 ரூபா 97 சதமாக பதிவாகியுள்ளது.
பவுண்ட் ஒன்றின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் விற்பனை பெறுமதி 452 ரூபா 19 சதமாக பதிவாகியுள்ளது.
அதேவேளை, பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 435 ரூபா 04 சதமாக பதிவாகியுள்ளது.
தமிழக அரசின் சிறந்த சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது (2014-2022)... யார் யாருக்கு விருது, முழு விவரம் Cineulagam
கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி: பெப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் தான்! Manithan
கனடாவிலிருந்து பிரிய விரும்பும் மாகாணமொன்றின் மக்கள்: அமெரிக்க அதிகாரிகளை சந்தித்ததால் பரபரப்பு News Lankasri