நாட்டில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகள்
நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட 58 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு (5,876,282) கோவிட் தடுப்பூசிகளின் முதல் அளவு செலுத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் 16 லட்சம் பேருக்கு (1,697,689), இரண்டாவது அளவு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி, 30 வயதிற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் சுமார் 14.8 சதவீதம் பேர் கடந்த திங்கள்கிழமைவரை இரண்டு அளவுகளுடன் முழுமையாக தடுப்பூசி அளவுகளை பெற்றுள்ளனர்.
அதே நேரத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட மக்கள்தொகையில் 51.1 சதவீதம் பேர் இதுவரை முதல் அளவைப் பெற்றுள்ளனர்.
இந்தநிலையில் நாட்டில் தடுப்பூசி செலுத்திக்கொண்டர்வர்களின் எண்ணிக்கை 75லட்சத்துக்கும் அதிகமானதாகும் (7,573,967) கம்பஹா , கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் தமது முதல் அளவைப் பெற்றுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட 77 சதவீத மக்கள் முதல் அளவைப் பெற்றுள்ளனர்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
