அதிபர் சேவை ஆட்சேர்ப்பு! வெளியாகவுள்ள வர்த்தமானி அறிவிப்பு
இலங்கை அதிபர் சேவையில் தற்போது பல வெற்றிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அடுத்த 2 வாரங்களுக்குள் புதிய ஆட்சேர்ப்பு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தி மதுர செனவிரத்னதெரிவித்துள்ளார்.
நேற்று (22) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
வெற்றிடங்கள் மற்றும் ஓய்வூதிய தரவு
தற்போதுள்ள வெற்றிடங்கள் மற்றும் ஓய்வூதிய தரவுகளின்படி, டிசம்பர் 31, 2023 நிலவரப்படி அதிபர் சேவையில் உள்ள மொத்த வெற்றிடங்களின் எண்ணிக்கை 3,151 என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

அதிபர் சேவையில் உள்ள வெற்றிடங்களுக்கு அரசியல் தலையீடு இல்லாமல் முறையான பதவி உயர்வு முறையின் கீழ் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு சேவை ஆணையகத்தின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam