தாக்கினால் களமிறங்குவோம் - சீனாவுக்கு பகிரங்மாக அறிவித்தது அமெரிக்கா! - செய்திகளின் தொகுப்பு
சீனா தாக்குதல் நடத்தும் பட்சத்தில் தாய்வனை தமது நாடு பாதுகாக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன்(Joe Biden) தெரிவித்துள்ளார்.
ஜோ பைடனின் இந்த அறிவிப்பானது, ஏற்கனவே காணப்படும் பதற்றத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தாய்வானை பாதுகாக்கும் அறிவிப்பானது, நீண்டகால அமெரிக்க வெளிவிவகார கொள்கை நிலையிலிருந்து வெளிப்படையாக விலகும் வகையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அரச தலைவரின் கருத்தானது அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை குறிக்கவில்லை என வெள்ளை மாளிகையின் ஊடகப் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
தாய்வானை சீனா தாக்கும் பட்சத்தில் உண்மையில் அமெரிக்கா என்ன செய்யும் என்பது பற்றி, தெளிவற்ற நிலையே காணப்படுவதாகவும், இது மூலோபாய தெளிவின்மை என வரையறுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் இந்தக் கருத்துக்கு சீனா இதுவரை பதில் அளிக்கவில்லை.
தாய்வான் தமது நாட்டில் இருந்து பிரிந்து செல்லும் மாகாணம் எனக் கூறிவரும் சீனா, அதனை தமது நாட்டுடன் இணைப்பதற்கு படைப்பலத்தை பயன்படுத்த தயங்கப் போவதில்லை என கூறிவருகிறது.
எனினும் தாம் இறையாண்மை கொண்ட ஒரு நாடு என தாய்வான் தொடர்ந்தும் கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியுடன் இணைத்து மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
