கூட்டமைப்பை அமெரிக்கா அழைக்கவில்லை : வெடித்தது புதிய சர்ச்சை
அமெரிக்க அதிகாரிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைக்கவில்லை, அங்கிருக்கக் கூடிய சட்டவல்லுனர்களை சந்திப்பதற்கான தனிப்பட்ட பயணமாகவே இதனை கருத முடியும் என டெலோ அமைப்பின் உத்தியோகப்பூர்வ பேச்சாளரும் சர்வதேச தொடர்பாளருமான சுரேன் குருசாமி தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியலில் தமிழர்கள் விவகாரம் அண்மைக்காலங்களில் பேசுபொருளாக மாறியிருக்கின்றது. ஆனால் தமிழர்கள் மத்தியில் இருக்கின்ற அடிப்படை சிக்கல்கள் தொடர்பில் தீர்வு நோக்கிய பயணத்தில் தமிழ் தலைமைகள் தடுமாறுகின்றனரா? அல்லது தென்னிலங்கை தலைமைகள் தமிழ் தரப்புக்களை பயன்படுத்துகின்றதா? என்ற கேள்விகள் இருக்கின்றன.
இந்த நிலையில் நாளைய தமிழ் சமூகம் எதை நோக்கி பயணிக்கப் போகின்றது என்பது தொடர்பான உண்மைத் தன்மைகளை விமர்சன ரீதியாக ஆராய்கிறது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி.
இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சியல் எம்மோடு இணைந்து மேலும் பல தகவல்களை வழங்குகிறார் சுரேன் குருசாமி அவர்கள்.
அவருடனான முழு நேர்காணல் இதோ,

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
