உலகம் எதிர் நோக்கவுள்ள மற்றொரு போர் : ஐ.நா. பொதுச்செயலாளர் எச்சரிக்கை
உலகம் மற்றொரு போரை எதிர்நோக்கவுள்ளதாக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ்(antónio guterres) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே ஆழமடைந்து வரும் மோதல் மற்றொரு பாரிய போருக்கு வழிவகுக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி ஹஜ் சமி தலேப் அப்துல்லா கொல்லப்பட்டார்.
எதிர்பாராத வழிகள்
இந்நிலையில், ஷியா இராணுவ குழுவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா மேற்கு ஜெருசலேமில் முழு அளவிலான போருக்குச் செல்வதாக எச்சரித்துள்ள சூழலில், அதற்கு பதிலளிக்கும் வகையிலே ஐ.நா பொதுச்செயலாளர் தனது அறிக்கையின் மூலம் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், பிடிவாதமான முடிவும், தவறான மதிப்பீடும், எல்லைகளைக் கடந்து எதிர்பாராத வழிகளில் செல்லும் மற்றொரு பாரிய பேரழிவை உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லெபனானை மற்றொரு காசாவாக பார்க்க உலகம் விரும்பவில்லை என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான சமாதான முன்னெடுப்புகளை இரு தரப்பினரும் முன்னெடுத்துச் செல்லுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நிலவி வரும் மோதலுக்கு இராணுவ ரீதியில் தீர்வு கிடைக்காது என்று அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
