எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் திடீரென தீப்பிடித்து எரிந்த முச்சக்கர வண்டி
களுத்துறை பண்டாரகமை நகரில் எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்குள் முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பிடித்துள்ளது. இந்த சம்பவம் இன்று நடந்துள்ளது.
முச்சக்கர வண்டிக்கு எரிபொருளை நிரப்பிய பின்னர் அதனை இயக்கிய போது பின்புறம் இருக்கும் இயந்திர பகுதியில் தீ பற்றியுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து அங்கு எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக சென்றிருந்த வாகன சாரதி அந்த இடத்தில் இருந்து உடனடியாக வாகனங்களை அப்புறப்படுத்தியுள்ளனர்.
எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் ஊழியர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதற்கு அங்கு வந்திருந்த சிலரும் உதவியுள்ளனர்.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் மூலம் ஏற்படவிருந்த மிகப் பெரிய அழிவை தடுக்க முடிந்ததாக எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். முச்சக்கர வண்டியில் தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.





Ethirneechal: எங்க காதல சேர்த்து வை.. வெறிக் கொண்டு சீறிய சக்தி- திருமணத்தில் புது திருப்பம் Manithan

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

siragadikka aasai: படுமோசமான முத்து.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்- பேரானந்தத்தில் விஜயா Manithan

சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam
