வீடொன்றில் கொள்ளையிட நுழைந்தவர் வாசலிலேயே உயிரிழப்பு: வெளியான காரணம்
அவிசாவளை – உக்வத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் கொள்ளையிட வந்த ஒருவர் வீட்டு வாசலிலேயே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (16) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உக்வத்தை பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடொன்றிற்குள் நுழைந்த சந்தேகநபர் வீட்டிலிருந்த கையடக்கத் தொலைபேசி ஒன்றை திருடி தப்பிச்செல்ல முயற்சித்துள்ளார்.
பொலிஸார் மேலதிக விசாரணை
இதன்போது வீட்டின் மதில் வழியாக வெளியேற முயற்சித்த நிலையில், சுமார் 20 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து அவிசாவளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் 45 வயது மதிக்கத்தக்கவர் எனவும், இதுவரை அவரது அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
மேலும், நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம், அவிசாவளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri