''புதிய அரசியலமைப்பினை குறுகிய காலத்திற்குள் உருவாக்க முடியாது''
பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஊடாக அரசியல் நோக்கம் நிறைவேற்றிக் கொள்ளப்படுகின்றமை முற்றிலும் தவறானது என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண(Tissa Vitharana) தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம் திருத்தியமைக்கப்பட வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தினால் மக்களின் அடிப்படை உரிமை மீறப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘‘புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இவ்வருடத்தின் இறுதியில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பது சாத்தியமற்றது.
அவ்வாறு உருவாக்கினாலும் அது முழுமையற்றதாக காணப்படும்.
அனைத்து இன மக்களின் அபிலாசைகளுக்கும் அமைய புதிய அரசியலமைப்பினை குறுகிய காலத்திற்குள் உருவாக்க முடியாது‘‘ என அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
