உள்ளூராட்சி சபைகளில் பதவிக்காலம் ஜனவரியில் முடிகிறது
உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி முடிவடைய உள்ளதாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழு ஏற்கனவே தயாராகி வருவதான் அதன் தலைவர் நிமல் ஜீ. புஞ்சிஹேவா (Nimal G.Punchihewa) தெரிவித்துள்ளார்.
தேர்தல் , வாக்கெடுப்பு முறை மற்றும் அதன் சட்டத்தில் திருத்தங்களை அறிமுகப்படுத்தவும் அதற்கு தேவையான திருத்தங்களை முன்வைக்கவும் நியமிக்கப்பட்டுள்ள விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம் அவர் இதனை கூறியுள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த வேண்டுமாயின் நான்கு மாதங்களுக்கு முன்னர் இருந்தே தயாராக வேண்டியது அவசியம்.
இதனடிப்படையில், எந்த மாற்றங்களும் இன்றி தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின் கீழ் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த வேண்டுமாயின் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தேர்தலுக்கான திகதியை அறிவிக்க வேண்டும் எனவும் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
மிக மோசமான வீழ்ச்சி... மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்படலாம்: எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள் News Lankasri
இலங்கை பாடகர் சபேசனுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயத்தை செய்த எஸ்.பி.சரண்... எமோஷ்னலான மேடை Cineulagam