ஆசிரியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் தொடரும்
ஆசிரியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கும் ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இன்றைய தினம் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டது.
அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு இதுவரையில் தீர்வு கிடைக்கப்பெறவில்லை என ஆசிரியர் தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் இன்றைய தினம் அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஆசிரியர் தொழிற்சங்கங்களினால் ஒன்லைன் கல்வி நடவடிக்கைகளை பகிஷ்கரிக்கும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் தொழிற்சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

இந்த பேரழிவு தரும் இரத்தக்களரி முடிந்ததும்.,புடினுடன் 2 மணிநேரம் பேசிய ட்ரம்ப்: வெளியிட்ட பதிவு News Lankasri
