புர்ஜ் கலீபாவில் ஒளிர்ந்தது தமிழ் மொழி!
துபாயில் உள்ள உலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா கட்டிடத்தில் தமிழரின் பண்பாட்டையும் பெருமையையும் விளக்கும் வகையில் காணொலி காட்சி ஒளிபரப்பப்பட்டது.
துபாயில் கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி முதல் சர்வதேச கண்காட்சி நடைபெற்று வருகின்றது. இந்தக் கண்காட்சி எதிர்வரும் 31ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்நிலையில், மார்ச் 25ம் திகதி முதல் 31ம் திகதி வரை தமிழ்நாடு வாரம் கடைப்பிடிக்கப்படுகின்றது.
இந்நிலையில், 4 நாள் விஜயமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றுள்ளார். இந்த எக்ஸ்போ கண்காட்சியில் உள்ள தமிழ்நாட்டிற்கான அரங்கை மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இந்நிலையில், துபாயில் உள்ள உலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா கட்டிடத்தில் தமிழரின் பண்பாட்டையும் பெருமையையும் விளக்கும் வகையில் காணொலி காட்சி ஒளிபரப்பப்பட்டது.