விடுதலை வேட்கையுடன் தொடரும் சுவிஸ் நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப்பயணம்
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டும், எமது விடுதலைப்போரின் நியாயத்தன்மையை உணர்த்தவும் பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணமானது சீரற்ற காலநிலைக்கும், சிரமத்திற்கும் மத்தியிலும் விடுதலை வேட்கையுடன் இரு குழுக்களாகத் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்துடன் ஆரம்பமானது.
தொடர்ச்சியாக 17.05.2021 இன்று மூன்றாவது நாளாக லங்கெந்தால், சொலத்தூர்ண் நகரங்களுக்கு ஊடாகப் பயணிக்கின்றனர்.
சூரிச் மாநிலத்தில் ஆரம்பித்த பயணமானது சுக் மாநிலத்தில் இன உணர்வாளர்களின் உற்சாக வரவேற்புடனும், விருந்தோம்பலுடன் நிறைவடைந்ததுடன், தொடர்ந்து கடும் மழையினையும் பொருட்படுத்தாது விடுதலை வேட்கையுடன் சுக் மாநிலத்திலிருந்து லுட்சேர்ன் மாநிலத்தை மாலையளவில் சென்றடைந்த போது மனிதநேயச் செயற்பாட்டாளர்களை லுட்சேர்ன் வாழ் மாநில இன உணர்வாளர்கள் வரவேற்பளித்து அவர்களது நோக்கம் வெற்றிபெற வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
சூரிச் மாநிலத்தில் மாநகரசபை உத்தியோகஸ்தர்களிடம் தமிழின அழிப்புப் பற்றியதான மகஜர் கையளிக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.





இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan