கோவிட் தொடர்பாக மாத இறுதியில் முக்கிய அறிவித்தலை வெளியிடவுள்ள சுவிஸ் அரசாங்கம்
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் தனிமைப்படுத்தப்பட்ட வேண்டியவர்கள் மற்றும் கோவிட் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் தொடர்பான தகவல்கள் சுவிஸர்லாந்து இந்த மாத இறுதியில் அறிவிக்க உள்ளது.
பேர்னில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் வைரஸ் தொற்று நோய்க்கான அரசாங்கம் வகுத்துள்ள அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் தளர்த்தப்படவுள்ளதுடன் கோவிட் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் பல தளர்வுகளையும் அரசாங்கம் அறிவித்துள்ளது. மே 31 ஆம் திகதி முதல் உணவகங்களுக்கு உணவுகளை உண்ண அனுமதி வழங்கப்படும்.
நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி மற்றும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலகளித்தல் என்பனவும் அதில் அடங்கும்.
மே 26 ஆம் திகதி வரையில் கோவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை கட்டுப்பாட்டுக்குள் வந்தால் மாத்திரமே இந்த முடிவுகள் நடைமுறைப்படுத்தப்படும். ஏற்கனவே தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மே 31 ஆம் திகதியுடன் கைவிடும்.
தொற்று நோயின் நிலைமையானது கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டுமே இது அமுல்படுத்தப்படும். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மற்றும் கோவிட் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்கள், மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளுதல் மற்றும் பயண தடைகளில் இருந்து விலக்களிக்கப்படும்.
ஏப்ரல் மாத பிற்பகுதியில் வைரஸ் பாதிப்புக்குள்ள நபர்களுடன் தொடர்புக்கொண்ட தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர்களுக்கான தனிமைப்படுத்தலை தளர்த்துவதாக சுவிஸர்லாந்து அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது. எனினும் வெளிநாடுகளில் இருந்து திரும்பும் நபர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
எதிர்வரும் நாட்களில் புதிய தனிமைப்படுத்தல் நடைமுறைகள் எவ்வாறு சம்பந்தப்படும் என்பது தொடர்பாக அரசாங்கம் மேலதிக விபரங்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக அதிகளவில் கோவிட் வைரஸ் பரவும் நாடுகள் அல்லது பிராந்தியங்களில் இருந்து வருபவர்கள் அல்லது கோவிட் வைரஸின் திரிபுகள் காணப்படும் சந்தர்ப்பங்களில் சில உள்நுளைவு சட்டங்கள் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.