மிக கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவி! - பொலிஸார் வெளியிட்ட தகவல் (Video)
சர்வதேச மகளிர் தினமான நேற்று (08) பிற்பகல் பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய மாணவியொருவர் மிக கொடூரமாக கோடரியால் வெட்டிக் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹாலிஎல உடுவர ஏழாம் கட்டைப்பகுதியில் வைத்து 18 வயதுடைய மாணவி ஒருவர் இவ்வாறு தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ஹாலிஎல உடுவர தோட்டப் பகுதியைச் சேர்ந்த தர்மராஜா லிபியா என்ற 18 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொலை செய்ததாக கூறப்படும் உடுவர தோட்டத்தைச் சேர்ந்த சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கைது செய்ய நான்கு விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பதுளை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
ஹாலிஎல தமிழ்க் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி, பாடசாலை முடிந்து பேருந்தில் ஏறியுள்ளார்.
பேருந்தில் இருந்து இறங்கி வலஸ்பெத்த வீதியில் உடுவர 7 போஸ்டில் நடந்து சென்று கொண்டிருந்த போது, சம்பவ இடத்திற்கு வந்த இளைஞன் மாணவியிடம் காதல் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், மாணவியை தலையில் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட மாணவியிடம் பல வருடங்களாக காதல் கோரிக்கை விடுத்த சந்தேகநபரை மாணவியின் தாயாரின் எதிர்ப்பால் தாயையும், மாணவியின் சகோதரனையும் கோடரியால் தாக்கியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதாக தெரியவந்துள்ளது. பதுளை பதில் நீதவான் மாணவியின் கொலைச் சம்பவம் தொடர்பான ஆரம்ப நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார். மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.