துணை மருத்துவ நிபுணர்களின் போராட்டம் இன்றும் தொடர்கிறது!
துணை மருத்துவ நிபுணர்களால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம், இன்று இரண்டாவது நாளாகவும் தொடரவுள்ளது.
மருத்துவ துணைத் தொழில்களுக்கான கூட்டு சபை (JCPSM) இதனை அறிவித்துள்ளது.
பணிப்புறக்கணிப்பு
மருத்துவப் பட்டப்படிப்பு முடித்தவர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் பதவி உயர்வு தொடர்பான பிரச்சினைகள் உட்பட்ட ஐந்து முக்கிய கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

மருத்துவ ஆய்வக சேவைகள், மருந்தகத் துறைகள் மற்றும் பிற துணை மருத்துவ சேவையைச் சேர்ந்த ஐந்து பிரிவினர், இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.
இருப்பினும், மஹரகம புற்றுநோய் மருத்துவமனை, மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகள், சிறுநீரக மருத்துவமனைகள் மற்றும் மத்திய இரத்த வங்கி (CBB) ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட தொழிற்சங்க உறுப்பினர்கள், பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவில்லை.
இந்தியாவில் 1 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படவில்லை... பலரும் அறிந்திராத தகவல் News Lankasri
என் சாவுக்கு நீ தான் காரணம்.. விவாகரத்து வேண்டும்.. சரவணன் கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ Cineulagam