மேய்ச்சல் தரையை மீட்க பண்ணையாளர்களின் தொடரும் போராட்டம்

Batticaloa Sri Lanka
By Parthiban Feb 26, 2024 07:56 PM GMT
Report

ஐந்து மாதங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமக்கும், தமது கால்நடைகளுக்கும் சிங்கள பெரும்பான்மையின விவசாயிகளால் இழைக்கப்படும் அட்டூழியங்களும், அநியாயங்களும் அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாணத்தின் தமிழ் பாற்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஊடகங்களுக்கு நேற்று (26.02.2024) கருத்து தெரிவிக்கும் போதே பண்ணையாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

மயிலத்தமடு, மாதவணையில் மேய்ச்சல் தரையை பலவந்தமாக ஆக்கிரமித்துள்ள சிங்கள விவசாயிகளை அகற்றுமாறு தமிழ் பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தொடர் போராட்டம்

திருக்கோணேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

திருக்கோணேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பில் விசேட கலந்துரையாடல்


கடந்த வருடம் செப்டெம்பர் 13ஆம் திகதி, மட்டக்களப்பு மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தில் பாற்பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்க முடியாது என மாவட்டத்தின் அப்போதைய செயலாளர் கமலாவதி பத்மராஜா தெரிவித்ததை அடுத்து, செப்டெம்பர் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக தமிழ் பாற்பண்ணையாளர்கள் முதன் முதலாக ஆரம்பித்த போராட்டம் இன்றும் தொடர்கிறது.

மேய்ச்சல் தரையை மீட்க பண்ணையாளர்களின் தொடரும் போராட்டம் | The Struggle Batti Farmers To Reclaim Grazing Land

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தம்மை சந்திப்பதாக நேற்று (25) தெரிவித்த, மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச, தம்மை சந்திக்கவில்லை என மயிலத்தமடு மாதவணை பால் பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் சீனிதம்பி நிமலன் தெரிவிக்கின்றார்.

மேய்ச்சல் தரை காணி

அத்துமீறி மேய்ச்சல் தரையை பலவந்தமாக ஆக்கிரமித்துள்ள சிங்கள விவசாயிகள், போராட்டம் ஆரம்பித்த நாள் முதல் இதுவரை 275 மாடுகளை கொலை செய்துள்ளதாகவும் இதுத் தொடர்பில் கரடியனாறு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளபோதிலும் இதுவரை எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் சீனிதம்பி நிமலன் குறிப்பிட்டுள்ளார்.

மேய்ச்சல் தரையை மீட்க பண்ணையாளர்களின் தொடரும் போராட்டம் | The Struggle Batti Farmers To Reclaim Grazing Land

குறித்த 275 மாடுகளும் 22 பண்ணையாளர்களுக்கு சொந்தமானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேய்ச்சல் தரையை கைப்பற்றியுள்ள சிங்கள விவசாயிகள் சிறிய குளங்கள் மற்றும் ஆறுகளையும் ஆக்கிரமித்துள்ளமையால் மாடுகளின் தாகத்தைத் தீர்க்க வழியின்றி பண்ணையாளர்கள் தடுமாறுவதாக அவர் வலியுறுத்தியள்ளார்.

மேய்ச்சல் தரையை மீட்க பண்ணையாளர்களின் தொடரும் போராட்டம் | The Struggle Batti Farmers To Reclaim Grazing Land

சுமார் 6,500 ஏக்கர்களைக் கொண்ட குறித்த மேய்ச்சல் தரை காணியில் 5,000 ஏக்கர் வரையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயப் பணியில் ஈடுபடுவதற்கென அந்த பிரதேசத்தில் சுமார் 700 பேர் வரையில் தங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மயிலத்தமடு, மாதவணையில் மேய்ச்சல் தரையை நம்பி 982 பால் பண்ணையாளர்களுக்குச் சொந்தமான சுமார் இரண்டு இலட்சம் மாடுகள் காணப்படுவதோடு, இந்த மாடுகளை தமது வாழ்வாதாரமாக நம்பி சுமார் 3,000 குடும்பங்கள் வாழ்கின்ற நிலையில் இவர்கள் அனைவரது வாழ்வதாரமும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளதாக மயிலத்தமடு மாதவணை பால் பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் சீனிதம்பி நிமலன் தெரிவித்துள்ளார்.

வாழ்வதாரம் கேள்விக்குறி

தனக்கு சொந்தமான 50 மாடுகளில், 15 மாடுகளை விவசாயிகள் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கும் பண்ணையாளர் ஒருவர், தமது வாழ்வதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.

மேய்ச்சல் தரையை மீட்க பண்ணையாளர்களின் தொடரும் போராட்டம் | The Struggle Batti Farmers To Reclaim Grazing Land

“காலங்காலமாக மாடுகள் கொண்டுவந்து கட்டும் இடம். இவர்கள் அத்துமீறி குடியேறியமையால் எங்கள் மாடுகளை கட்ட முடியாமல் உள்ளது. வெட்டுவதும், சுடுவதும், இதோடு வெட்டிடி போட்டுள்ளார்கள். 

இதோடு 15 மாடுகள். என்னுடைய 50 பதிவு செய்து, 15 மாடுகள் இவ்வாறு கிடக்கின்றன. இதற்கு அரசாங்கம்தான் பொறுப்புக்கூற வேண்டும். எங்களுக்கு ஒரு ஆதாரமும் இல்லை. மாடுதான் எங்களின் வாழ்வாதாரம்”என கூறியுள்ளார்.

இந்தியா - மாலைதீவு முறுகல் நிலை: இந்தியாவுக்கு ஆதரவாக ஒலித்த குரல்

இந்தியா - மாலைதீவு முறுகல் நிலை: இந்தியாவுக்கு ஆதரவாக ஒலித்த குரல்

இலங்கையர்களால் கடலில் வீசிய கடத்தல் தங்கத்தை தேடும் பணி தோல்வி

இலங்கையர்களால் கடலில் வீசிய கடத்தல் தங்கத்தை தேடும் பணி தோல்வி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, வவுனியா

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், Toronto, Canada

31 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், கொழும்பு

28 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US