கோமாளி வீரனாகி வீரன் கோமாளியான கதை
கடந்த 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா, ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தின் மூன்று அமைச்சுக்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த போது ரணில் அமெரிக்காவில் இருந்தார்.
ரணில் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பும் போது, சந்திரிக்கா மூன்று அமைச்சுக்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தமைக்கு எதிராக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு எதிரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வெற்றி கோஷத்திற்கு மத்தியில் விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்த ரணில், வாகனத்தில் ஏறிக்கொண்டதுடன் தனது அரசியல் நண்பரான மலிக் சமரவிக்ரமவையும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டார்.
அப்போது மலிக் சமரவிக்ரமவுக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்தது. ரணிலின் அரசாங்கத்தில் அன்று கமத்தொழில் அமைச்சராக இருந்த எஸ்.பி. திஸாநாயக்க அந்த தொலைபேசி அழைப்பை எடுத்திருந்தார்.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட தயாராக இருப்பதாக எஸ்.பி.திஸாநாயக்க, மலிக் சமரவிக்ரமவிடம் கூறினார். எனினும் ரணில் இதனை கடுமையாக எதிர்த்தார். ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து செல்ல உத்தரவிடுமாறு அவர் மலிக் சமரவிக்ரமவுக்கு ஆலோசனை வழங்கினார்.
பிற்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட சந்திரிக்காவின் அரசியல் நண்பரான மங்கள சமரவீர இவ்வாறு கூறியிருந்தார்.
“ எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்த தினத்தில் நானும், சந்திரிக்காவும் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து உலங்குவானூர்தியில் ஏறி ஹொரகொல்ல வளவுக்கு சென்றோம். ஆர்ப்பாட்டகாரர்கள் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டால், சந்திரிக்கா, ஹொரகொல்ல வளவில் இருந்து உடனடியாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்று வெளிநாடு செல்ல, ஹொரகொல்லவில் உலங்குவானூர்தி தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
சந்திரிக்கா அம்மையாரும் நாங்கள் அனைவரும் அச்சத்துடன் இருந்தோம். மக்கள் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டால், சந்திரிக்கா வெளிநாட்டுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்” என மங்கள சமரவீர கூறியிருந்தார்.
இந்த கதையை மங்களவும் ஸ்ரீபதி சூரியாராச்சியும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிஸ்தர்களிடம் கூறியிருந்தனர். எனினும் ஜனாதிபதி செயலகத்தையோ, ஜனாதிபதி மாளிகையையோ மக்கள் முற்றுகையிடுவார் என்று அன்று சந்திரிக்காவை விட ரணில் விக்ரமசிங்கவே அச்சத்தில் இருந்தார்.
ஆர்ப்பாட்டகாரர்களை கலைந்துகொள்ளுமாறு ஆலோசனை வழங்கிய ரணில், சந்திரிக்காவுடன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள மலிக் சமரவிக்ரமவை சந்திரிக்காவிடம் அனுப்பினார். ஜனாதிபதியாக பதவிக்கு வரும் சிறந்த வாய்ப்பை ரணில் இதன் காரணமாகவே இழந்தார்.
இலங்கையின் எதிர்க்கட்சிகள் அச்சம் காரணமாக அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம் அல்லது ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடும் ஆபத்தான தீர்மானத்தை என்றும் எடுத்ததில்லை.
1953 ஆம் ஆண்டு என்.எம். பெரேரா, கொல்வின் ஆர்.டி. சில்வா போன்றவர்கள் வீதியில் போராட்டங்களை நடத்தினார்களே அன்றி, அன்றைய பிரதமர் டட்லி சேனாநாயக்க வசித்த அலரி மாளிகையை முற்றுகையிட அச்சம் கொண்டிருந்தனர்.
ஜே.ஆர். ஜெயவர்தன, பண்டாரநாயக்க அரசாங்கத்திற்கு எதிராக கண்டிக்கு பாத யாத்திரை சென்றரே தவிர அலரி மாளிகைக்கு செல்லவில்லை. 1970 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சிறிமாவே பண்டாரநாயக்கவின் அரசாங்கத்திற்கு எதிராக ஜே.ஆர். ஜெயவர்தன, கொழும்பு நகர சபையில் சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தினார்.
ஆனால், அலரி மாளிகைக்கு செல்லவில்லை. சிறிமாவோ பண்டாரநாயக்க, ஜே.ஆர். ஜெயவர்தனவின் அரசாங்கத்திற்கு எதிராக புறக்கோட்டை போதி மரத்திற்கு கீழ் சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தினாரே இன்றி ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட செல்லவில்லை.
அதேபோல் மகிந்த ராஜபக்ச, ரணசிங்க பிரேமதாசவின் அரசாங்கத்திற்கு எதிராக விகார மஹாதேவி பூங்காவில் இருந்து கதிர்காமத்திற்கு பாத யாத்திரை சென்றாரே அன்றி, ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லவில்லை.
சிறிமாவோ பண்டாரநாயக்க, பிரேமதாசவுக்கு எதிராக சந்திரிக்காவுடன் இணைந்து ஹொரகொல்லை பண்டாரநாயக்க சமாதியில் இருந்து காலிமுகத் திடலில் உள்ள பண்டாரநாயக்கவின் உருவச்சிலை வரை பேரணி நடத்தினார். ஆனால், பிரேமதாசவுக்கு எதிராக ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லவில்லை.
ரணிலும் காமினி அத்துகோரளவும் சந்திரிக்காவுக்கு எதிராக கண்டியில் இருந்து கொழும்பு விகாரை மஹாதேவி பூங்காவை வரை ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தினார்களே அன்றி, சந்திரிக்கா இருந்த ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லவில்லை.
2005 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவும், திஸ்ஸ அத்தநாயக்கவும் கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நகர மண்டபம் வரை பேரணியாக வந்தனர். எனினும் ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லவில்லை.
மகிந்த ராஜபக்ச 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் காலிமுகத் திடல், லேக் ஹவுஸ் சுற்று வட்டம் ஆகிய இடங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை வரையறுத்துக்கொண்டார். அவரும் ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லவில்லை.
எனினும் அச்சமின்றி ஜனாதிபதி செயலகத்தை சுற்றிவளைத்து அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை நடத்தி முதல் எதிர்க்கட்சி ஐக்கிய மக்கள் சக்தி என்பதுடன் முதல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆவார்.
ஜனாதிபதி ஒருவர் பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில், அரசாங்கம் பதவிக்கு வந்து ஓராண்டில் கொழும்புக்கு மக்களை திரட்டி, ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் கோல் பேஸ் ஹொட்டலுக்கு எதிரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்திய முதல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.
2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இது நடந்தது. அது கொரோனா காரணமாக மக்கள் வீதியில் இறங்க பயந்த காலம். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கொண்ட பலமிக்க அரசாங்கத்திற்கு எதிராக அவர் கொழும்புக்கு மக்களை திரட்டி வந்தார்.
எதிர்க்கட்சி என்ற வகையில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு எதிராக 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்த கோரி மிகப் பெரிய ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தியது.
இதன் பின்னர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிக்கு வந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி கொழும்புக்கு மக்களை திரட்டி வந்து பெரிய ஆர்ப்பாட்டங்கள் எதனையும் நடத்தவில்லை.
மைத்திரி ரணிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிய பின்னரே ஐக்கிய தேசியக் கட்சி 2005 ஆம் ஆண்டு பின் பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அதுவும் மிகப் பெரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமாக இருக்கவில்லை. அதுவும் அலரி மாளிகை சுற்று வட்டப் பகுதியிலேயே நடந்தது. ரணில் அலரி மாளிகையை பிடித்துக்கொண்டிருந்தார்.
2005 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆர்ப்பாட்ட பேரணிக்கு பின்னர் மைத்திரி - ரணில் அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு காலிமுகத் திடலில் மிகப் பெரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் கூட்டமும் நடந்தது. அதனை பசில் ராஜபக்ச ஒழுங்கு செய்திருந்தார்.
2019 ஆம் ஆண்டு காலிமுகத் திட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் போது சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கும் மிகப் பெரிய பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இப்படி பார்க்கும் போது சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியில் கொழும்பில் அண்மையில் நடத்திய ஆர்ப்பாட்டம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக கருதலாம்.
நாட்டின் பிரதான எதிர்க்கட்சி ஜனாதிபதி செயலகத்திற்கு சென்று, ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பு தரப்பினருடன் மோதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் நடந்ததில்லை.
2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி செயலகத்திற்கு தெரியும் எல்லையில் மக்களை ஒன்று திரட்டி பலத்தை காட்டியது. அண்மையில் ஜனாதிபதி செயலகத்தின் நுழைவு வாயில் அருகே மக்களை ஒன்று திரட்டி பலத்தை காட்டியுள்ளது.
பலமில்லாதவர் எனக் கூறிய சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி இதனை செய்தது. கோட்டாபய என்று பெயரைக் கூட அஞ்சுபவர், கோட்டாபயவுடன் உடன்பாட்டில் இருப்பவர் எனக் கூறிய சஜித் இதனை செய்து காட்டியுள்ளார்.
பிலிப்பைன்ஸ், தாய்லாந்து போன்ற நாடுகளின் மக்கள் ஜனாதிபதி மாளிகை, பிரதமரின் மாளிகையை ஆகியவற்றை முற்றுகையிடுவது வழக்கம். எனினும் இலங்கை மக்கள் இன்னும் அதற்கு தயாரில்லை.
காரணம் அச்சம். இது பல காலமாக நாட்டின் அரசியல் மேதாவிகள் கூறும் கதை. எனினும் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இதனை மாற்றி காட்டியுள்ளது.இது உக்ரைனின் கோமாளி எனக் கூறி செலேன்ஸ்கி, உலகில் சக்தி வாய்ந்த மனிதர் எனக் கூறிய ரஷ்யாவின் புட்டினை தாக்குவதற்கு அஞ்சாததை போன்றது.
ராஜபக்சவினர் சஜித் பிரேமதாசவை செலேன்ஸ்கி என்ற உக்ரைனின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட நகைச்சுவை நடிகருக்கு ஒப்பிட்டனர். இன்று ரஷ்யாவையும் உக்ரைனையும் நோக்கும் போது வீரன் என வர்ணிக்கப்பட்ட புட்டின் கோமாளியாக மாறியுள்ளார்.
கோமாளி என வர்ணிக்கப்பட்ட செலன்ஸ்கி வீரனாக மாறியுள்ளார். இலங்கையிலும் கோமாளி வீரனாக மாறியுள்ளதுடன் வீரன் கோமாளியாகியாக மாறியுள்ளார்.
கட்டுரையாளர்:உபுல் ஜோசப் பெர்னாண்டோ
மொழியாக்கம்:ஸ்டீபன் மாணிக்கம்

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
