அரிசி தட்டுபாடு! அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
ஒரு கிலோ அரிசிக்கான இறக்குமதி வரியை 65 ரூபாவிலிருந்து 40 ரூபாவாக குறைக்குமாறு அரிசி இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் அண்மையில் வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவுடன் இறக்குமதியாளர்கள் கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தியிருந்தனர்.
அரிசி இறக்குமதி
நாடு அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அரிசியை இறக்குமதி செய்வதற்கு தாங்கள் தயாராக உள்ளதாக இறக்குமதியாளர்கள் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளனர்.
அதன்போது ஒரு கிலோ அரிசிக்கான இறக்குமதி வரியை 65 ரூபாவிலிருந்து 40 ரூபாவாக குறைக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விலை மனு
அரிசி இறக்குமதிக்கு சந்தர்ப்பம் வழங்கினால் 15 நாட்களுக்குள் சந்தையில் நாட்டு அரிசிக்கான தட்டுப்பாட்டைக் குறைக்க முடியும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தநிலையில், அரிசி இறக்குமதிக்கான விலை மனு கோரப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளிடம் கொள்வனவு செய்வதற்கு போதியளவு நெல் கையிருப்பில் இல்லை எனவும் இறக்குமதியாளர்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 10 மணி நேரம் முன்

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் மனைவிக்கு என்ன ஆச்சு.. கதறி அழும் பொன்னி சீரியல் வைஷ்ணவி.. வைரல் வீடியோ Cineulagam

Vijay Television Awards: அதிக விருதுகளை தட்டிதூக்கிய சீரியல் எது தெரியமா.. வென்றவர்களின் லிஸ்ட் இதோ Cineulagam
