ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிறிய கட்சியல்ல
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டணிக்கட்சிகளின் 12 அமைப்புகள் அடங்கிய அணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இல்லை என அதன் சிரேஷ்ட உப தலைவரான அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியின் கூட்டங்களில் தனிப்பட்ட ரீதியான அழைப்புகளின் அடிப்படையிலேயே தயாசிறி ஜயசேகர கலந்துக்கொண்டார்.
எனினும் அனைத்து கூட்டங்கள் குறித்தும் கட்சிக்கு அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
எனினும் தற்போது ஆளும் கட்சியின் கூட்டங்களில் கலந்து கொள்வதை சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர நிறுத்தி கொண்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சிறிய கட்சியாக அடையாளப்படுத்துவது தவறு.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணியில் இருக்கும் பிரதான மற்றும் பெரிய கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.